
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று சட்டமன்றத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மொத்தம் 234 கோடி வெள்ளி பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது. அந்த வகையில் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 97 தமிழ்ப்பள்ளிகள் மேம்பாட்டிற்கு உதவும் வகையில் 50 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் சிலாங்கூர் மாநில அரசு தமிழ் பள்ளிகளுக்கு மிகப்பெரிய மானியம் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள கோயில்களுக்கு உதவும் வகையில் 18 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. உயர் கல்வி கூடங்களில் பயிலும் ஏழை இந்திய மாணவர்களுக்கு கல்வி நிதி மற்றும் தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் வசதி குறைந்த மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து கட்டணம் ஆகியவற்றுக்கு சிலாங்கூர் மாநில அரசாங்கம் 20 லட்சம் வெள்ளியை ஒதுங்கி உள்ளது என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
