
ஐ சிட் எனப்படும் சிலாங்கூர் மாநில இந்தியர்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்திற்கு சிலாங்கூர் மாநில அரசு 11 லட்சத்து 40,000 வெள்ளியை ஒதுக்கியுள்ளது. சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள இந்தியர் சிறு தொழில் வியாபாரத்தில் ஊக்குவிக்கும் வகையில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழ உறுப்பினர் வீ கணபதி ராவ் தலைமையில் ஐ சிட் திட்டத்தில் மூலம் வியாபார உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் அடுத்த ஆண்டிலும் சிறப்பாக செயல்படுவதற்கு சிலாங்கூர் மாநில அரசாங்கம் 2022 பட்ஜெட்டில் 11லட்சத்து 40,000 வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மிகவும் பாராட்டுக்குரியது என்று கணபதி ராவ் தெரிவித்தார்.
