29 C
Kuala Lumpur
Wednesday, July 15, 2026

Vetri

சிலாங்கூர் மாநில பட்ஜெட்டில் இந்தியர்களுக்கு பல நன்மைகள்! கணபதி ராவ் பெருமிதம்

🔥 Views : 14
👁 Reading Now : 38

2022 ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் மாநில பட்ஜெட்டில் சிலாங்கூர் மாநில இந்திய சமுதாயத்திற்கு நன்மைகள் தரும் திட்டங்கள் இடம் பெற்றுள்ளன என்று ஆட்சிக்குழு உறுப்பினர் வீ கணபதி ராவ் தெரிவித்தார். சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு மீண்டும் 50 லட்சம். கோயில்களுக்கு 18 லட்சம், தீபாவளி பண்டிகையை பட்டுசீட்டு 20 லட்சம், ஐ சிட் இந்திய தொழில் முனைவோர் திட்டத்திற்கு 11 லட்சத்து 40 ஆயிரம், இந்திய கலை கலாச்சார நிகழ்வுக்கு 5 லட்சம், இந்திய மாணவர் கல்விநிதி மற்றும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இலவச போக்குவரத்து கட்டணத்திற்கு 20 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் சொன்னார். சிலாங்கூர் மாநில அரசாங்கம் மற்றும் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இந்திய சமுதாயத்திற்கு உற்சாகம் தரும் வகையில் மானியங்களை அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles