26.7 C
Kuala Lumpur
Tuesday, September 29, 2026

Vetri

சிலாங்கூர் மாநிலத்தில் சமூக நல திட்டங்களுக்கு 6 கோடியே 52 லட்சம் ஒதுக்கீடு

🔥 Views : 29
👁 Reading Now : 46

சிலாங்கூர் மக்களுக்கு அடுத்த ஆண்டில் பல்வேறு சமூக நல திட்டங்களை அமல்படுத்துவதற்காக மாநில அரசாங்கம் 6 கோடியே 52லட்சத்து 50,000 வெள்ளியை ஒதுக்கியுள்ளது. பரிவு மிக்க அரசாங்கத்தின் நிரந்தர குழு, வீடுகள் சீரமைப்பு மற்றும் புதிதாக வீடுகள் கட்டும் திட்டத்திற்கு கூடுதலாக ஒதுக்கிய 12 லம்சம் வெள்ளி தொகையுடன் மொத்தம் 20 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக மந்திரிபுசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று 2022 பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது தெரிவித்தார். இந்த கூடுதல் ஒதுக்கீட்டின் மூலம் அதிகமானோருக்கு சமூக பொருளாதார மீட்சிக்கு உதவ முடியும் என அவர் கூறினார். B40 குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு வசதியான மற்றும் பாதுகாப்பைக் கொண்ட வீடுகளில் குடியிருப்பதற்கு சிலாங்கூர் அரசாங்கம் உதவும் என டத்தோஸ்ரீ அமிருடின் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles