
பாலர்பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளிகளில் வாரம் ஒருமுறை கோவிட் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்ற அரசாங்கம் விரைவில் கட்டளையிடும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார். அங்கு மாணவர்கள் நோய்க்கு எதிராக தடுப்பூசி போடுவதற்கு இன்னும் தகுதி பெறவில்லை. வரும் திங்கட்கிழமை தொடங்கப்படும் தேசிய கோவிட்-19 சோதனை திட்டத்தில் இதுவும் ஒன்று என்றும், பள்ளிகளில் கோவிட்-19 திறல்கள் இல்லை என்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது என்று அவர் கூறினார்.



