29 C
Kuala Lumpur
Wednesday, July 15, 2026

Vetri

கெஅடிலானில் இன்று இணைகிறார் டாக்டர் மஸ்லி மாலிக்

🔥 Views : 13
👁 Reading Now : 62

ஜொகூர் சுங்கை ரெங்காம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மஸ்லி மாலிக் இன்று கெஅடிலான் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைகிறார். 2018 இல் நடைபெற்ற தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் பெர்சத்து கட்சி வேட்பாளராக சுங்கை ரெங்காம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் இருந்து பெர்சத்து விலகிய போது அவர் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க மறுத்து விட்டார். துன் டாக்டர் மகாதீர் பெர்ஜூவாங் கட்சி ஆரம்பித்த போது அதில் அவர் சேரவில்லை. ஒரு சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவர் இன்று கெஅடிலான் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைகிறார் என்று ஜொகூர் கெஅடிலான் துணை தலைவர் ஜிம்மி புவா தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles