26.7 C
Kuala Lumpur
Tuesday, September 29, 2026

Vetri

2022 சிலாங்கூர் மாநில பட்ஜெட்டில் 234 கோடி வெள்ளி ஒதுக்கீடு

🔥 Views : 28
👁 Reading Now : 38

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மொத்தம் 234 கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்தார். சிலாங்கூர் மாநில மக்கள், வர்த்தக சமூகம் மற்றும் பொருளாதாரத் துறைக்கு பயனளிப்பதை நோக்கமாக கொண்டு இந்த பட்ஜெட் அமைந்துள்ளது என்றார். இவ்வாண்டிற்கான 232 கோடி வெள்ளி வரவு செலவுத் திட்டத்தை விட அடுத்த்தாண்டிற்கு ஒதுக்கப்பட்ட தொகை சற்று அதிகமாகும். அந்த தொகையில் 122 கோடி வெள்ளி அல்லது 52 விழுக்காடு நிர்வாகச் செலவினங்களுக்காகவும் 112 கோடி வெள்ளி அல்லது 48 விழுக்காடு மேம்பாட்டிற்காகவும் பயன்படுத்தப்படும். மேலும் 2022 ஆம் ஆண்டில் 205 கோடி வெள்ளியை வருமான ஈட்ட முடியும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles