
சிலாங்கூர் மாநில மக்களின் விடாமுயற்சியும் ஆக்கத்தன்மையும் மாநில மக்களுக்கு தடுப்பூசி போடும் இலக்கை குறுகிய காலத்தில் அடைந்தோம் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். 2022 சிலாங்கூர் மாநில பட்ஜெட்டை சட்டமன்றத்தில் தாக்கல் செய்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார். நோய்த்தொற்று விவகாரத்தில் நாம் மெத்தனமாக இருக்கக்கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார். கோவிட் நோய்தொற்று முழு சமூகத்தின் நீண்ட கால வாழ்க்கை முறையை மாற்றுகிறது. கடந்த ஆண்டு முதல் மத்திய அரசு விதித்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக சிலாங்கூர் மக்கள் முழுவதுமாக வீட்டிலேயே வாழ்ந்தனர். இந்த நடமாட்ட கட்டுப்பாடு ஆணைக் காலத்தில் நமக்கு ஏற்பட்ட சோதனைகள், நம்மை அதிகம் பக்குவப்படுத்தியது. நமது வாழ்வின் அனைத்து அம்சங்களும் சோதிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டுள்ளது என்றார். எவ்வளவு பெரிய சவாலாக இருந்தாலும், அவைகளை படிப்பினையாக கொண்டு பொறுமை, விடாமுயற்சி, சகிப்புத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் சோதனைகளை கடப்போம் என்று அவர் சொன்னார்.
