29 C
Kuala Lumpur
Wednesday, July 15, 2026

Vetri

மலாக்கா மாநில ஆட்சிக் குழுவில் 8 புதுமுகங்கள்! மாநில அம்னோ தலைவருக்கும் பதவி

🔥 Views : 14
👁 Reading Now : 42

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி 21இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. மலாக்கா மாநில முதல்வராக டத்தோஸ்ரீ சுலைமான் முகமட் அலி பதவி ஏற்ற வேளையில் இன்று ஆட்சிக்குழு உறுப்பினர் பெயர்களை அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதில் 8 பேர் புதுமுகங்கள். அந்த வகையில் தஞ்சோங் பிடாரா சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற மலாக்கா மாநில அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ராவூப் ஆட்சிக்குழு வில் இடம் பெற்றிருக்கும் முக்கிய தலைவர் ஆவார். காடேக் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ம இகா வேட்பாளர் பி சண்முகம் ஆட்சிக் குழுவில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles