27.3 C
Kuala Lumpur
Saturday, April 18, 2026

Vetri

போதைப் பொருள் குற்றங்கள் – மூன்று மலேசிய இந்தியர்களின் மேல் முறையீடு நிராகரிப்பு

மலேசியர்களான கமல்நாதன் முனியாண்டி, வயது 27, சந்துரு சுப்பிரமணியம், வயது 57, இருவருக்கும் சிங்கப்பூரின் உச்ச நீதிமன்றம் மரண தண்டனைகளை உறுதி செய்துள்ளது. குறைந்தது 1.34 கிலோகிராம் போதைமிகு அபினைக் கடத்திய குற்றத்திற்காக இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், இச்சம்பவத்துடன் தொடர்புடை மலேசியரான 26 வயது பிரவினாஷ் சந்திரனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையையும் 15 பிரம்படிகளையும் நீதிமன்றம் உறுதிசெய்தது. இந்த வழக்கில் மூவரது மேல்முறையீட்டையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. பிரவினாஷ், போதைப்பொருளைக் கடத்தியதாகவும் பிறகு அவர் அத்தகையை கடத்தல்களுக்கு உதவியதாகவும் அரசுதரப்பு வழக்கறிஞர்கள் தெரிவிர்ததனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles