
மலேசிய கிண்ணக் கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்திற்கு ஜொகூர் ஜெடிதி கிளப்பும் கேஎல் சிட்டி கிளப்பும் தேர்வு பெற்றுள்ளன. நேற்றிரவு நடந்த பரபரப்பான அரையிறுதி ஆட்டத்தில் ஜொகூர் ஜெதிடி 4-1 என்ற கோல் கணக்கில் திரெங்கானுவை வீழ்த்தி இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் கேஎல் சிட்டி கிளப் 5-3 என்ற பெனால்டி கோல் கணக்கில் மலாக்கா யுனைடெட் கிளப்பை வீழ்த்தி இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது. வரும் நவம்பர் 30 ஆம் தேதி புக்கிட் ஜாலில் அரங்கில் மலேசிய கிண்ணக் கால்பந்து போட்டி இறுதி ஆட்டம் நடைபெறுகிறது. இம்முறை மலேசியா கிண்ணத்தை வெல்ல ஜொகூர் ஜெதிடி கிளப்பும் கேஎல் சிட்டி கிளப்பும் நேரடி பலப்பரிட்சை நடத்தவுள்ளன.
