28.5 C
Kuala Lumpur
Tuesday, June 2, 2026

Vetri

SOP விதிமுறைகளுக்கு உட்பட்டு பினாங்கு மாநில தைப்பூசம் விமர்சையாக கொண்டாடப்படும்

🔥 Views : 8
👁 Reading Now : 40

வரும் 2022 ஆம் ஆண்டில் பினாங்கில் மாநிலத்தில் தைப்பூச கொண்டாட்டத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி தெரிவித்தார். ஆண்டுதோறும் பினாங்கு பால தண்டாயுதபாணி கோவிலில் விமரிசையாகக் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா, கடந்தாண்டு கோவிட் காரணமாகரத்து செய்யப்பட்டது . இந்நிலையில், அடுத்தாண்டு ஜனவரி மாதம் 18ஆம் தேதியில் பினாங்கு மாநில தைப்பூசம் எஸ்.ஓ.பி விதிமுறைகளுக்குட்பட்டு கொண்டாடப்படும் என்று பினாங்கு இந்து அறநிலைய வாரியத் தலைவருமான டாக்டர் இராமசாமி தெரிவித்தார். இதனிடையே மூக இடைவெளியோடு கூடிய எஸ்.ஓ.பி. விதிமுறைகளை நிர்ணயிப்பதில் தமது குழு ஈடுபட்டு வருவதாக பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ எம். இராமச்சந்திரன் தெரிவித்தார். ஒரு நேரத்தில் 10 பேர் வரை பால்குடம் ஏந்திச் செல்லவும் தங்க ரத ஊர்வலத்துக்கும் அனுமதி வழங்கப்படும் என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles