
தற்போது புதிய கோவிட் வைரஸ் எனப்படும் omicron பரவிக் கொண்டிருக்கும் வேளையில் இது தொடர்பில் உலக சுகாதார அமைப்பின் அறிக்கையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று மலேசிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார். புதிய வைரஸ் காரணமாக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஏழு நாடுகளுக்கு மலேசியர்கள் பயணம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார். புதிய வைரஸ் தற்போது தென்னாப்பிரிக்காவில் 77 புகார்களும் போட்ஸ்வானா நாட்டில் 4 புகார்களும் ஹாங்காங் நாட்டில் 2 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஐரோப்பியாவைச் சேர்ந்த சேர்ந்த பல நாடுகள் தென்னாப்பிரிக்காவுக்கு தங்களது விமான சேவையை நிறுத்தியுள்ளன.
