32.9 C
Kuala Lumpur
Tuesday, June 2, 2026

Vetri

மலேசிய கிண்ணத்தை ஜெடிதி வென்றால் டிசம்பர் 1ஆம் தேதி ஜொகூருக்கு சிறப்பு விடுமுறை!

🔥 Views : 9
👁 Reading Now : 69

நவம்பர் 30 ஆம் தேதி நடைபெறும் மலேசியக் கிண்ணக் கால்பந்து போட்டியில் ஜோகூர் ஜெடிதி கிளப் வாகை சூடினால் டிசம்பர் 1 ஆம் தேதி ஜொகூருக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோ ஹஸ்னி முகமட் தெரிவித்தார். வரும் நவம்பர் 30 ஆம் தேதி புக்கிட் ஜாலில் அரங்கில் மலேசிய கிண்ணக் கால்பந்து இறுதி ஆட்டத்தில் ஜொகூர் ஜெடிதி கிளப்பை எதிர்த்து கே.எல் சிட்டி மோதுகிறது. புக்கிட் ஜாலில் அரங்கில் இறுதி ஆட்டத்தை நேரில் கண்டு மகிழ 20,000 ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பரபரப்பான இறுதி ஆட்டத்தில் ஜெடிதி வெற்றி பெற்று கிண்ணத்தை வாகை சூடினால் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி ஜொகூருக்கு விடுமுறை வழங்கப்படும். இவ்விடுமுறையின் நோக்கம் இக்கால்பந்து போட்டியை ஏற்பாடு செய்து 100ஆவது முறையாக ஜெடிதி ஹரிமாவ் செலாத்தான் குழு இக்கிண்ணத்தை வென்றிருப்பதைக் கொண்டாடுவதற்கு சிறப்பு தினமாகும் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles