
வரும் பொதுத்தேர்தலில் கெஅடிலான் சின்னத்தில் போட்டியிடும் முடிவு தொடர்பில் பக்கத்தான் ஹரப்பான் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கெஅடிலான் வியூக இயக்குனர் பாமி பாட்சில் தெரிவித்தார். மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல் உட்பட பல தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் சின்னத்தில் போட்டியிட்ட பல வேட்பாளர்கள் தோல்வி கண்டனர். அந்த வகையில் பக்கத்தான் ஹரப்பான் கெஅடிலான் சின்னம் பயன்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் மேலும் பக்கத்தான் ஹரப்பான் சின்னத்தில் மாற்றம் செய்வது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அவர் சொன்னார்.
