
மலேசியாவில் மிகவும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மலேசிய எம்ஜிஆர் சிலம்பக் கழகத்தின் ஏற்பாட்டில் அண்மையில் இணையம் வழி இளையோர் சிலம்பப் போட்டி நடத்தப்பட்டது. பேராக், சிலாங்கூர், புத்ரா ஜெயா, நெகிரி செம்பிலான், கோலாலம்பூர் மாநிலங்களைச் சேர்ந்த 231 இளம் சிலம்ப விளையாட்டாளர்கள் இதில் பங்கேற்றனர். இந்த போட்டி இணையம் வழி இரண்டு வாரங்கள் நடைபெற்றதாக மலேசிய எம்ஜிஆர் சிலம்ப கழகத்தின் தலைமை மகாகுருவும் தலைவருமான மோகன் தெரிவித்தார். 4 முதல் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் இதில் பங்கேற்ற தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். ஒரே நேரத்தில் 231 இளம் மாணவர்கள் சிலம்பப் போட்டியில் பங்கேற்றது இது முதல் முறையாகும் . மேலும் இந்த போட்டி சாதனையாளர் புத்தகத்திலும் இடம் பிடித்திருக்கிறது என்று மகாகுரு மோகன் தெரிவித்தார். நாட்டில் சிலம்பக் கலை வளர்ச்சிக்கு மலேசிய எம்ஜிஆர் சிலம்பக் கழகம் முக்கிய பங்காற்றி வருகிறது. நோய்த்தொற்று காலகட்டத்திலும் மாணவர்களுக்கு இணையம் வழி சிலம்ப போட்டிகளை நடத்தி அவர்களை பெருமளவில் உற்சாகப்படுத்தி வருகிறோம் என்று அவர் சொன்னார். இனிவரும் காலங்களில் மாணவர்கள் நேரடியாக களத்தில் இறங்கும் வகையில் பல போட்டிகள் நடத்தப்படும் என்று மகாகுரு மோகன் தெரிவித்தார். சிலம்பம் மாஸ்டர் கண்ணன் சுப்பிரமணியம், மாஸ்டர் தர்ஷினி மீனா, மாஸ்டர் அர்வின் ராவ், மாஸ்டர் திலகவதி, மாஸ்டர் பரமேஸ்வரி மாஸ்டர் பரம ஜோதி, மாஸ்டர் யுவராஜா, மாஸ்டர் பாலச்சந்திரன், மாஸ்டர் கண்ணன், மாஸ்டர் யோகேஸ்வரன்,மாஸ்டர் குமரவேல் ஆகியோர் இந்த போட்டியை சிறப்பாக நடத்தினார்.
