26.7 C
Kuala Lumpur
Tuesday, September 29, 2026

Vetri

டிசம்பர் 4 மற்றும் 9 ஆம் தேதிகளில் திருச்சி புறப்படுகிறது ஏர் மலிண்டோ சிறப்பு விமானம்!

🔥 Views : 33
👁 Reading Now : 32

நாட்டில் புகழ்பெற்ற கிள்ளான் கேபி டிராவல்ஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் வரும் டிசம்பர் மாதம் 4 மற்றும் 9 ஆம் தேதிகளில் ஏர் மலிண்டோ சிறப்பு விமானம் திருச்சி புறப்படுகிறது என்று கேபிஎஸ் டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கே.பி. சாமி தெரிவித்தார். விசா முடிந்தும் இன்னும் நாட்டில் தங்கியிருக்கும் இந்திய பிரஜைகள் இந்த சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் திரும்பலாம். தற்போது இந்தியா செல்வதற்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று முடிந்துள்ளன. ஆகவே தாயகம் திரும்ப விரும்பும் இந்திய பிரஜைகள் குறிப்பாக தமிழக பிரஜைகள் இந்த சிறப்பு விமானத்தில் பத்திரமாக தாயகம் திரும்புவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படுவதாக கே.பி. சாமி தெரிவித்தார்.

தாயகம் திரும்ப விரும்பும் இந்திய பிரஜைகள் காலம் தாழ்த்தாமல் உடனடியாக தங்களது விமான டிக்கெட்டை முன்கூட்டியே பதிவு செய்யும்படி அவர் கேட்டுக் கொண்டார். தொடர்புக்கு கே பி. சாமி 016-2626755 அல்லது நிர்வாகி கவின் 016 – 2229341 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles