26.7 C
Kuala Lumpur
Tuesday, September 29, 2026

Vetri

Anak Selangor Anak Sihat திட்டத்தில் 700 சிறார்களுக்கு சம சத்துணவு வழங்கப்படும்

🔥 Views : 36
👁 Reading Now : 61

சிலாங்கூர் மாநிலத்தில் சம சத்துணவு பெறும் சிறார்களின் எண்ணிக்கை 500 இல் இருந்து அடுத்தாண்டு 700 ஆக அதிகரிக்கப்படும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் தெரிவித்தார். சம சத்துணவைப் பெறுவதிலிருந்து யாரும் விடுபடக்கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையில் இத்திட்டத்தில் கூடுதலாக 200 சிறார்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் சிறார்கள் மத்தியில் காணப்படும் வளர்ச்சி குறைபாட்டை களைய முடியும். அனாக் சிலாங்கூர் அனாக் சேஹாட் எனும் இத்திட்டம் இவ்வாண்டு தொடக்கப்பட்டது. தகுதி உள்ள சிறார்களுக்கு பால் மற்றும் சம சத்துணவு இத்திட்டத்தின் வழி வழங்கப்படுகிறது என்றார் அவர். வளர்ச்சி குன்றிய மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள சிறார்களுக்கான இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவோரின் எண்ணிக்கையை 500 லிருந்து 700 ஆக உயர்த்தியுள்ளோம். என்றும் அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles