
தமிழ் சினிமாவில் நடன இயக்குனர் மற்றும் நடிகராக பலரால் அறியப்பட்டவர் சிவசங்கர் மாஸ்டர்(வயது 72). கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு, அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது. இதையடுத்து அவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது தெரியவந்தது. அவரது நுரையீரல் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. அவரது மூத்த மகனும் கொரானாவால் பாதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்தும் சிவசங்கர் மாஸ்டரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு காலமானார். அவரது மறைவுக்கு சிரஞ்சீவி, பாகுபலி இயக்குனர் ராஜமவுலி மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
