27.1 C
Kuala Lumpur
Friday, July 17, 2026

Vetri

பாலியல் தொல்லைக் குற்றச்சாட்டுத் தொடர்பில் போலீஸ் ம இகா உறுப்பினரிடம் விசாரணை!

🔥 Views : 16
👁 Reading Now : 44

ஒரு பெண்மணிக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்ததாக ம.இ.கா. உறுப்பினருக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று சுங்கை சிப்புட் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் கைஸாம் அகமட் ஷாஹாபுடின் தெரிவித்தார். இச்சம்பவத்தில் அந்த ம.இ.கா. உறுப்பினர் மரியாதைக் குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தியது மட்டுமின்றி ஆபாச செய்கைப் புரிந்ததாக பாதிக்கப்பட்டப் பெண்மணி குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக ஓர் அரசு சார்பற்ற இயக்கத்தின் செயலாளரான அப்பெண்மணி சுங்கை சிப்புட் வீடமைப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ளக் கால்வாய் பிரச்சனையை நேரில் காண அங்கு வருகைப் புரிந்தார். இச்சம்பவம் தொடர்பானப் புகார் கடந்த 25ஆம் தேதி வந்த வேளையில், அதற்கான விசாரணைக் கோப்பும் திறக்கப்பட்டு விட்டதாக அவர் தெரிவித்தார். இச்சம்பவம் 506ஆவதுக் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்படும். இதன் விசாரணைக் கோப்பு குறுகிய காலத்தில் துணை அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles