28.6 C
Kuala Lumpur
Thursday, July 16, 2026

Vetri

தாய்மொழிப் பள்ளிகளை படிப்படியாக அகற்ற வேண்டுமா? பகல் கனவு காண வேண்டாம் பெர்சத்துவை சாடினார் நெகிரி துணை சபாநாயகர் டத்தோ ரவி

🔥 Views : 18
👁 Reading Now : 44

நாட்டில் தாய்மொழிப் பள்ளிகள் படிப்படியாக அகற்றப்பட வேண்டும் என்று பெர்சத்து தகவல் பிரிவு தலைவர் அஸ்ராட் வலியுறுத்தி இருப்பதை நெகிரி செம்பிலான் மாநில துணை சபாநாயகர் டத்தோ எம். ரவி இன்று மிகக் கடுமையாக சாடியுள்ளார். வங்களாதேசிகள் கூட நன்றாக மலாய் மொழியில் பேசுகிறார்கள். ஆனால் தாய்மொழி பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மலாய் மொழியில் திறமை பெற்றிருக்கவில்லை என்று அவர் கூறியிருப்பது முட்டாள்தனமானது. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னர் இந்த நாட்டில் தாய் மொழிப் பள்ளிகள் உள்ளன. 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த தாய் மொழிப் பள்ளிகளை அகற்ற நினைக்கலாம் என்று யாரும் பகல் கனவு காண வேண்டாம். தாய்மொழி பள்ளியில் படித்தவர்கள் இன்று பல அனைத்துலக அரங்கில் வெற்றிகளை குவித்து வருகிறார்கள். பல உயர்ந்த பதவிகளில் இருந்தார்கள். இப்போதும் இருக்கிறார்கள். ஆகவே இந்நாட்டில் தாய்மொழிப் பள்ளிகளை அகற்றிவிடலாம் என்று இறுமாப்பில் இருக்கவேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles