25.8 C
Kuala Lumpur
Monday, April 6, 2026

Vetri

முதியவர் தாக்கப்படும் சம்பவம்!
போலீசில் புகார் செய்தார் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

என்னையும் ம இ கா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் பற்றியும் மோசமாக பேசியதற்காக முதியவர் ஒருவரை மூன்று ஆடவர்கள் தாக்கும் சம்பவம் தொடர்பில் போலீசார் ஒளிவுமறைவின்றி விசாரணை செய்ய வேண்டும் என்று ம இ கா தேசியத்தலைவர் டான்ஸ்ரீ எஸ் ஏ விக்னேஸ்வரன் போலீஸ் புகார் செய்திருக்கிறார்.
நேற்று சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்று பரபரப்பாக வெளியானது.
அதில் முதியவர் ஒருவரை மூன்று ஆடவர்கள் கண்மூடித்தனமாக தாக்குகிறார்கள்.
விக்னேஸ்வரன் மற்றும் சரவணனை பற்றி மோசமாக பேசியதால் மன்னிப்பு கேட்கும்படி அந்த முதியவரை மூன்று ஆடவர்கள் தாக்கியதோடு தடியால் அடித்து கொடுமை படுத்துகிறார்கள். மூன்று ஆடவர்கள் தாக்குதலுக்கு பயந்து அந்த முதியவரும் மன்னிப்பு கேட்கிறார்.


இந்த விடியோவில் என் பெயரும் சரவணன் பெயரும் கூறப் படுவதால் டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் விக்னேஸ்வரன் நேற்று மாலையில் புகார் செய்தார்.
எங்களின் உத்தரவு பேரில் தான் அந்த முதியவர் தாக்கப்படுகிறார் என்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளார்கள்.
இந்த சம்பவத்தில் எங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. ஆகவே, போலீசார் விசாரணை நடத்தும்படி விக்னேஸ்வரன் தனது புகாரில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles