32.9 C
Kuala Lumpur
Wednesday, July 15, 2026

Vetri

சிலாங்கூரில் முழு முடக்கம் தேவையில்லை!

🔥 Views : 26
👁 Reading Now : 39

சிலாங்கூர் மாநிலத்தில் முழு அளவில் மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல் செய்ய வேண்டாம் என சிலாங்கூர் மாநில கோவிட்-19 பணிக்குழு மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.

அதற்கு பதிலாக இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல் செய்வதன் மூலம் கோவிட்-19 நோய்த் தொற்றை ஆக்ககரமான முறையில் கட்டுப்படுத்த முடியும்.

சிலாங்கூரில் முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல் செய்யும் முடிவை புத்ரா ஜெயா மறு ஆய்வு செய்யும் என்று பெரிதும் எதிர்பார்ப்பதாக பணிக்குழுவின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்லி தெரிவித்தார்.

மாநிலத்தில் அன்றாட கோவிட்-19 சம்பவங்களை அடிப்படையாக கொண்டு நிலைமையே மத்திய அரசு மதிப்பீடு செய்யக்கூடாது. 69 லட்சம் மக்கள் தொகையையும் அதிக தொழில்துறைகளையும் கொண்ட மாநிலமாக இது விளங்குவதையும் அது கருத்தில் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles