26.4 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

அவதூறுகளை பரப்பிய பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

🔥 Views : 6
👁 Reading Now : 27

பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியம் மற்றும் எனக்கு எதிராக அவதூறு பரப்பியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி கடுமையாக எச்சரித்துள்ளார்.. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் முகநூலில் என்னையும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தை குற்றம் சாட்டி அவதூறுகளை பரப்பிய பினாங்கு மாநில ம இ கா தலைவர் சேதுபதி மணியம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் பணம் தவறாக கையாளப்படுகிறது இவர் முன் வைத்த என்ற குற்றச்சாட்டும் இன்று பொய்யாகி விட்டது. இதையடுத்து 45,000 வெள்ளி இழப்பீடாக செலுத்த சேதுபதி ஒப்புக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியம் மற்றும் எனக்கு எதிராக மேலும் பலர் இதுபோன்ற அவதூறுகளை முன் வைத்துள்ளனர். அவருக்கு எதிராக வழக்குத் தொடுத்து கொடுப்பேன் என்று டாக்டர் இராமசாமி தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles