29 C
Kuala Lumpur
Wednesday, July 15, 2026

Vetri

Selangor ku வீடமைப்பு திட்டத்தில் 24, 428 வீடுகள் கட்டப்பட்டுள்ளன

🔥 Views : 21
👁 Reading Now : 61

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு நவம்பர் 15 ஆம் தேதி வரை சிலாங்கூர் கூ வீடமைப்பு திட்டத்தில் 24,428 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு பொது மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்று சிலாங்கூர் அரசு அறிவித்துள்ளது. இதில் 9,294 வீடுகள் “சி“ பிரிவைச் சேர்ந்தவையாகும் என்று சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் தெரிவித்தார். இது தவிர, “டி“ பிரிவில் 7,822 வீடுகளும் “பி“ பிரிவில் 4,122 வீடுகளும் கட்டப்பட்டது. இந்த வீடுகள் அனைத்தும் சிலாங்கூர் சொத்துடைமை மேம்பாட்டு வாரியத்திடம் ஒப்படைக்கப்படாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்கப்பட்டன என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles