34.7 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

அடுத்த வாரம் முதல் சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கு மானியம் வழங்கப்படும்

🔥 Views : 8
👁 Reading Now : 66

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் சார்பில் அடுத்த வாரம் முதல் கட்டம கட்டமாக 97 தமிழ்ப்பள்ளிகளுக்கு மானியம் வழங்கப்படும் என்று ஆட்சிக்குழு உறுப்பினர் வீ கணபதி ராவ் தெரிவித்தார். கோவிட் தாக்கத்தினால் இவ்வாண்டு பலமுறை பள்ளிகள் ஒத்திவைக்கப்பட்டது. இப்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 97 தமிழ்ப்பள்ளிகளுக்கு அடுத்த வாரம் முதல் மானியங்கள் வழங்கப்படுகின்றன. சிலாங்கூர் மாநில நிதியகம் தமிழ்ப் பள்ளிகளுக்கான மானியத்தை ஏற்பாடு செய்து வருகிறது. மேலும் 2022 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் சிலாங்கூர் மாநில அரசு தமிழ்ப்பள்ளிகளுக்கு மீண்டும் 50 லட்சம் வெள்ளி வெள்ளியை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles