29 C
Kuala Lumpur
Thursday, July 16, 2026

Vetri

உடல் நிலை சரியில்லாத ஆசிரியர் பாடம் போதிக்க அனுமதிக்கப்பட்டாரா?

🔥 Views : 18
👁 Reading Now : 22

கோவிட் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்பு உடல் நிலைச் சரியில்லாமல் இருந்த போதும் ஓர் ஆசிரியர் தொடர்ந்து பாடத்தை போதித்துக் கொண்டிருந்ததாக ஸ்ரீ புத்ரி சைபர்ஜெயா பள்ளியைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மாணவரின் தாயார் குற்றஞ்சாட்டினார். பாட நேரத்தில் மாணவர்கள் தங்களின் சுவாசக் கவசத்தைக் கழற்றக் கூடாது என்று அந்த ஆசிரியர் கடுமையாக எச்சரித்துள்ளார். இப்பள்ளியில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 1ஆம் படிவ மாணவர்களில் என் மகனும் ஒருவர். மாணவர்கள் எப்போதும் சுவாசக் கவசத்தை அணிந்திருக்க வேண்டும் என்று இந்த ஆசிரியர் அறிவுறுத்துவார் என்று என் மகனும் கூறுவார். ஆசிரியர் எப்போதும் 2 சுவாசக் கவசங்களை அணிந்திருந்த போதிலும் உடல் நிலை சரியில்லாதது போல்தான் காணப்படுவார். ஆனால் ஏன் அவர் அவ்வாறு கூறினார் என்றே தெரியவில்லை என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles