29 C
Kuala Lumpur
Thursday, July 16, 2026

Vetri

மலேசிய தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் தலைவராக கோபி குமரன் மீண்டும் தேர்வு

🔥 Views : 30
👁 Reading Now : 47

மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்ற பேரவையின் 2021ஆம் ஆண்டு பேராளர் மாநாடு வரும் ஞாயிற்றுக்கிழமை கிள்ளான் சந்தோஷ் அரினா மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகத்தை தேர்வு செய்யும் கடமை தேசியப் பேரவைக்கு இருப்பதால் தேர்தல் மற்றும் அதன் விதிமுறைகள் பற்றி போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. அண்மையில் கோலாலம்பூர் விஸ்மா கே.கே.பி மணிமன்றத்தின் பல்வேறு பொறுப்புகளுக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. இதில் கோபிகுமரன் பணிமன்றத்தின் தேசியத் தலைவராகவும், முருகன் மணியம் துணைத் தலைவராகவும் ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர். ஜந்து உதவித் தலைவர் பதவிகளுக்கு எட்டு பேர் போட்டியிடுகின்றனர். பொருளாளராக கவிமணி மது, உதவி பொருளாளராக ரோஷ்னி மேரி மற்றும் மகளிர் பிரிவு தலைவியாக ஷாலினி முத்துலிங்கம் ஆகியோர் போட்டியின்றித் தேர்வு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles