
இப்போதையச் சூழலில் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக மலேசியக் குடும்ப கூடியபட்ச விலைத் திட்டத்தை உள்நாட்டு வாணிபப் பயனீட்டாளர் விவகார அமைச்சு அமல்படுத்த உள்ளது என்று அதன் அமைச்சர், டத்தோஸ்ரீ அலெக்ஸாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார். வரும் 7 தொடங்கி 31ஆம் தேதி வரை அமல்படுத்தப்படும் இத்திட்டத்தில் சந்தைகளில் பொருட்களின் கையிருப்பு எந்நேரமும் இருப்பதும் உறுதிப்படுத்தப்படும். கோழி, கோழி முட்டை, காய்கறிகள் போன்ற சில குறிப்பிட்டப் பொருட்களுக்கான விலையை இது கட்டுப்படுத்தும் என்றார்.
