31.1 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

யூபிஎஸ்ஆர் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற 337 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு சிலாங்கூர் மாநில அரசு வெகுமதி வழங்கியது

🔥 Views : 5
👁 Reading Now : 64

கடந்த 2019 ஆம் ஆண்டு யு.பி.எஸ்.ஆர். தேர்வில் சிறப்பான அடைவு நிலையைப் பதிவு செய்த சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த 337 மாணவர்களுக்கு நேற்று சிலாங்கூர் மாநில அரசினால் வெகுமதி வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 8ஏ பெற்ற 101 மாணவர்களுக்கு தலா 200 வெள்ளியும் 7ஏ பெற்ற 113 மாணவர்களுக்கு தலா 150 வெள்ளியும் 6ஏ பெற்ற 123 மாணவர்களுக்கு தலா 100 வெள்ளியும் வழங்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார். ஜாலான் ஆக்கோப் தமிழ்ப்பள்ளியின் முன்னால் தலைமை ஆசிரியர் முனைவர் ஆர். ராமசாமி, கோலக்கிள்ளான் வாட்சன் தமிழ்ப்பள்ளியின் முன்னால் தலைமை ஆசிரியர் கே.சந்திராதேவி, கோலசிலாங்கூர் சுங்கை திராப் தமிழ்ப்பள்ளியின் முன்னால் தலைமை ஆசிரியர் எல்.பாலசுந்தரம் ஆகியோர் தோக்கோ குரு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. சிறந்த பள்ளிகளுக்கான பிரிவில் முதலிடம் பிடித்த சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளிக்கு 10,000 வெள்ளியும் இரண்டாம் இடத்தை பிடித்த காஜாங் தமிழ்ப்பள்ளிக்கு 6,000 வெள்ளியும் பூச்சோங் தமிழ்ப்பள்ளிக்கு 4,000 வெள்ளியும் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles