
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிண்ண போட்டியில் இன்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்தின் லிவர்பூல் கிளப் 2-1 என்ற கோல் கணக்கில் இத்தாலி ஏசி மிலான் கிளப்பை வீழ்த்தியது. லிவர்பூல் கோல்களை முகமட் சாலா மற்றும் ஓரிஜி ஆகியோர் அடித்தனர். மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயினை சேர்ந்த ரியல் மெட்ரிட் 2-0 என்ற கோல் கணக்கில் இத்தாலி இண்டர் மிலன் கிளப்பை வீழ்த்தியது.
