34.7 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

கோலாலம்பூர் தெகு நெகாராவில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது

🔥 Views : 8
👁 Reading Now : 60

கோலாலம்பூரில் வரலாற்று சிறப்புமிக்க தெகு நெகாராவில் புதிதாக உருவாக்கப்பட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் நேற்று விமர்சையாக நடைபெற்றது. இதற்கு முன்னர் காளியம்மன் கோவில் மற்றும் முனீஸ்வரர் கோவில் இந்த வளாகத்தில் இருந்தது. இப்போது கோவில்களும் ஒன்றிணைந்து ஸ்ரீ மகா மாரியம்மன் பெயரில் புதிய ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. ஆலய கும்பாபிஷேக ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டாக்டர் பாலா தலைமையில் நேற்று ஆகம முறைப்படி மகா கும்பாபிஷேகம் விமர்சியாக நடைபெற்றது. துணைத் தலைவர் சந்திரா, பொருளாளர் மணியம், நிர்வாக குழு உறுப்பினர் வேலாயுதம் ஆகியோர் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு வழங்கினர். ராமாஜி,இந்து சங்கத்தின் தலைவர் களில் ஒருவரான அம்பாங் சுப்பையா, புக்கிட் பிந்தாங் தொகுதி சமூக சேவையாளர் வி.எம். குணசேகரன், செராஸ் வட்டாரத்தில் சமூக சேவையாளர் பிள்ளை ஆகியோர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் இதில் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles