29 C
Kuala Lumpur
Thursday, July 16, 2026

Vetri

‘கைதொழில் மற்றும் டிஜிட்டல் கல்வி கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு’

🔥 Views : 21
👁 Reading Now : 64

கோவிட் காலத்தில் கல்வித் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு அமைவதற்கு கைதொழில் மற்றும் டிஜிட்டல் கல்வி மிகவும் முக்கியமான ஒன்றாகிவிட்டது என்று ஜொகூர் பொக்கோ சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ் இராமகிருஷ்ணன் தெரிவித்தார். தொழில் கல்வி கற்றும் பலர் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் இருக்கிறார்கள். வேலையில்லா பட்டதாரிகளுக்கும் மற்றும் எஸ்.பி.எம் முடித்த மாணவர்களும் பல்வேறு நிறுவனங்கள் வழங்கும் வேலை வாய்ப்புகள் அவர்களின் கல்வி மற்றும் தொழில் கல்வி தரத்துடன் ஒத்துப் போகாத ஒன்றாக அமைகிறது. காரணம், தற்போது உள்ள வேலை வாய்ப்புகள், டிஜிட்டல் கல்வி மற்றும் கைதொழில் கற்றவர்களுக்கு முக்கியதுவம் தருகிறது. இன்று எஸ்.பி.எம் மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் இளைஞர்கள் நிச்சயமாக இந்த யதார்த்தத்தை அறிந்திருக்க வேண்டும். எனவே, தற்போதைய கைத்தொழில் மற்றும் டிஜிட்டல் திறன்களைக் கற்றுக்கொள்ள அவர்கள் உடனடியாக தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles