
நாட்டில் 151 ஊராட்சி மன்றங்களில் ஊராட்சி தேர்தலை நடத்துவதற்கு சுமார் 30 கோடியே 20 லட்சம் வெள்ளி செலவாகும் என்பதால் ஊராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டம் கொண்டிருக்கவில்லை என்று இன்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. 2018 இல் பக்கத்தான் ஹரப்பான் தேர்தல் கொள்கை அறிக்கையில் கவுன்சிலர்களை தேர்வு செய்ய ஊராட்சி மன்ற தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்று பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் மரியா சின் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் ஒரு ஊராட்சி மன்றத் தேர்தலை நடத்த இருபது லட்சம் வெள்ளி தேவைப்படும். அந்த வகையில் 151 ஊராட்சி மன்றங்களில் தேர்தலை நடத்துவதற்கு குறைந்தது 30 கோடியே 20 லட்சம் வெள்ளி செலவாகும் என்பதால் அரசாங்கம் ஊராட்சிமன்றத் தேர்தலை நடத்த திட்டம் கொண்டிருக்கவில்லை என்று வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சு இன்று அறிவித்தது.
