
நோய்த்தொற்று கண்டவருடன் தொடர்பில் இருந்ததை மைசெஜாத்திரா உறுதி படுத்தியதைத் தொடர்ந்து டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோருக்கு எதிரான ஊழல் வழக்கு இன்று ஒத்திவைக்கப்பட்டது. சரவாக் மாநிலத்தில் பள்ளிகளுக்கு சூரிய ஒளிக்கதிர் பொறுத்தும் திட்டத்தில் கையூட்டு கோரியதாக அவருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு வழக்கு தற்போது கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
