
பேராக் மாநில கோலாகங்சார் மாரா கல்லூரியில் மாணவர் ஒருவரை பகிடிவதை செய்த சம்பவம் தொடர்பில் 6 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர் என்று பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ மியோர் தெரிவித்தார். மாணவன் ஒருவன் சகா மாணவர்களால் தாக்கப்படும் சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாணவன் வலி தாங்க முடியாமல் அலறி துடிக்கிறார். இந்த சம்பவம் தொடர்பில் பதிமூன்று வயதுடைய 6 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர் என்று அவர் சொன்னார்.
