
பக்கத்தான் ஹரப்பான் 22 மாதங்கள் ஆட்சி புரிந்தபோது பல வாக்குறுதிகள் காப்பாற்ற முடியாமல் போனதால் மக்கள் நம் மீது சற்று நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்று மூத்த அரசியல்வாதி லிம் கிட் சியாங் இன்று தெரிவித்தார். பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெற்று ஆட்சி புரிய 5 ஆண்டுகள் வழங்கப்பட்டன. ஆனால் 22 மாதத்தில் ஆட்சியை கவிழ்ந்து விட்டார்கள். இதனால் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. வாக்காளர்களை கவர நாம் கடுமையாக போராட வேண்டும். மனம் தளராமல் உழைக்க வேண்டும். அப்போதுதான் பக்கத்தான் ஹரப்பான் மீண்டும் வெற்றி பெற முடியும். சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் கட்சியினர் தொடர்ந்து கடுமையாக உழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
