26.4 C
Kuala Lumpur
Tuesday, June 9, 2026

Vetri

வெள்ளை மாளிகையில் தலைமை பதவியில் இந்தியர் நியமனம்!

🔥 Views : 5
👁 Reading Now : 22

இந்திய வம்சாவளியை சேர்ந்த கவுதம் ராகவன் என்பவரை அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தலைமை பொறுப்பில் நியமித்து அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றதிலிருந்து அமெரிக்க அரசாங்கத்தின் முக்கிய பதவிகளில் இந்தியர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது வெள்ளை மாளிகையில் தலைமை பொறுப்பில் இந்திய வம்சாவளியான கவுதம் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். கவுதம் ராகவன், இந்தியாவில் பிறந்து அமெரிக்காவின் சியாட்டில் பகுதியில் வளர்ந்தவர். ஸ்டான்போர்டு பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற அவர், முன்னாள் அதிபர் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் வெள்ளை மாளிகையில் அதிகாரமிக்க பதவிகள் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles