29.8 C
Kuala Lumpur
Tuesday, June 9, 2026

Vetri

மஇகாவின் பாரம்பரிய தொகுதிகளில் தோழமை கட்சிகள் போட்டியிடாது! டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் உத்தரவாதம்

🔥 Views : 6
👁 Reading Now : 51

நாட்டின் 15 ஆவது பொதுத்தேர்தலில் ம.இ.கா போட்டியிடும் பாரம்பரியத் தொகுதிகளில் தேசிய முன்னணியின் இதர தோழமைக் கட்சிகள் போட்டியிடாது என தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஸ்ரீ ஷாஹிட் ஹமிடி இன்று உத்தரவாதம் அளித்தார். மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு தேசிய முன்னணி மீண்டும் வலுப்பெற்றுள்ளது. ஆகையால் நமது அரசியல் சிந்தனையும் மாறவேண்டும். நமக்காக உழைத்த தோழமைக் கட்சிகளின் அர்ப்பணிப்பை நாம் மதிக்க வேண்டும். அந்த வகையில் தோழமைக் கட்சிகளுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்படும். குறிப்பாக இந்திய தோழமைக் கட்சிகளுக்கு வழங்கப்படும். ம.இ.காவின் பாரம்பரிய தொகுதிகளில் மற்ற தோழமை கட்சிகள் போட்டியிடாது என்று ம.இ.காவின் 75 ஆவது பொதுப் பேரவையில் டத்தோ ஸ்ரீ ஷாஹிட் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார். கோலாலம்பூரில் உள்ள மிண்டெக் மாநாட்டு மையத்தில் இன்று நடைபெற்ற ம இகா பேராளர்கள் மாநாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles