
கம்போங் காயூ ஆரா அடுக்குமாடி குடியிருப்பில் பிளாஸ்டிக் பை ஒன்றில் கைவிடப்பட்ட நிலையில் ஆண் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதிகாலை 4 மணியளவில் குழந்தையின் அழும் குரலைக் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது ஒரு பிளாஸ்டிக் பையில் ஒரு பச்சிளம் ஆண் குழந்தை இருப்பதைக் கண்டு குடியிருப்பாளர் ஒருவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்து சேர்ந்த போலீசார் அந்த பச்சிளம் குழந்தையை காப்பாற்றி கோலாலம்பூர் பெரிய மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். இந்த கைக்குழந்தையை கைவிட்டுச் சென்ற தாயார் யார் என்று தெரியவில்லை.
இது தொடர்பில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்று பெட்டாலிங் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் பக்குருடின் தெரிவித்தார்.
