
மலேசிய உரிமைகள் கட்சி என்றழைக்கப்படும் மீரா கட்சியின் தேசியப் பேராளர் மாநாடு வரும் டிசம்பர் 19 ஆம் தேதி தலைநகரில் உள்ள பிரபல தங்கும் விடுதியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 200 பேராளர்கள் மற்றும் 100 பார்வையாளர்கள் கலந்து கொள்கிறார்கள் என்று மீரா கட்சியின் தேசியத் தலைவர் கே.பி. சாமி தெரிவித்தார். Parti kuasa rakyat கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள். மேலும் பல கட்சி தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார். வரும் 15 ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் நடத்தப்படும் மீரா கட்சியின் தேசியப் பேராளர் மாநாட்டில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. மேலும் யாருடன் கூட்டணி அமைப்பது என்றும் மீரா கட்சியின் பேராளர்கள் தெளிவாக முடிவு எடுப்பார்கள் என்று கே.பி. சாமி தெரிவித்தார்.
