
சிலாங்கூர் மாநில கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் நடக்கும் சோசியல் கிண்ண போட்டியில் பங்கேற்றுள்ள ஷா ஆலம் பிரகாஷ் புத்ரா கிளப் இன்று டிசம்பர் 14 ஆம் தேதி இரவு 10 மணிக்கு பாடாங் கோத்தா கெமுனிங் திடலில் நடக்கும் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் வர்னா அகோங் கிளப்புடன் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தை வென்ற அடுத்தாண்டு சிலாங்கூர் சூப்பர் லீக் போட்டியில் 3 ஆவது டிவிஷன் லீக்கில் விளையாட வாய்ப்பு கிட்டும். அந்த வகையில் இன்று இரவு நடக்கும் இறுதியாட்டத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றுவோம் என்று பிரகாஷ் புத்ரா கிளப் தலைவர் பிரகாஷ் தெரிவித்தார். சிலாங்கூர் மாநில முன்னாள் ஆட்டக்காரர் யோகேஸ்வரன் துணை நிர்வாகி மற்றும் பயிற்சியாளராக இருந்து பிரகாஷ் புத்ரா ஆட்டக்காரர்களுக்கு தீவிர பயிற்சியை வழங்கி இருக்கிறார். டத்தோ சிவா மற்றும் டத்தோ ரமேஷ் ஆகியோர் பிரகாஷ் புத்ரா கிளப்புக்கு பெரும் உதவி புரிந்துள்ளனர் என்று பிரகாஷ் தெரிவித்தார்.
