
நாட்டிலுள்ள பெரியவர்களில் 97.3 சதவீதம் பேர் அல்லது 2 கோடியே 27 லட்சத்து 88 ஆயிரத்து 835 பேர் கோவிட்-19 தடுப்பூசி ஊசியை முழுமையாகப் பெற்றுள்ளனர். மேலும் 2 கோடியே 31 லட்சத்து 2 ஆயிரத்து 672 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனிடையே, 12 முதல் 17 வயதிற்குட்பட்ட இளையோரில் 86.6 விழுக்காட்டினர் அல்லது 27 லட்சத்து 26 ஆயிரத்து 239 பேர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ள வேளையில் 28 லட்சத்து 26 ஆயிரத்து 872 பேர் அல்லது 89.8 சதவீதம் பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
