29.6 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

மக்களுக்கு உடனடியாக தடுப்பூசி கிடைக்க வேண்டும் !
டத்தோஶ்ரீ அன்வார் வேண்டுகோள்

🔥 Views : 10
👁 Reading Now : 40
To Listen This News In Tamil Click Play Button

நாட்டில் கோவவிட் 19 நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ரஹிம் தெரிவித்தார். நோய்த்தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு விரைந்து தடுப்பூசி போடப்பட வேண்டும். மாநில அரசாங்கங்கள் தடுப்பூசி வாங்குவதற்கு அனுமதிக்க வேண்டும்.
மேலும், முதலாளிகள் தங்களது தொழிலாளர்களுக்காக தடுப்பூசியை வாங்குவதற்கு அனுமதி தர வேண்டும்.


ஒரு நிறுவனத்தினால் மட்டுமே அனைத்து மலேசியர்களுக்கும் தடுப்பூசியை போட்டு விட முடியாது. ஆகவே மக்களுக்கு உடனடியாக தடுப்பூசி கிடைக்க வேண்டுமென்றால் மாநில அரசாங்கம் மற்றும் மற்ற முதலாளிகள் தடுப்பூசியை வாங்க அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் மின்னல் வேகத்தில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போட்டு நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முடியும் என்று அவர் சொன்னார் இதனிடையே, டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கருத்தை வரவேற்ற சிலாங்கூர் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜோர்ஜ் குணராஜ், மக்களுக்கு தடுப்பூசி கிடைப்பதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்.
அனைத்து மாநில அரசாங்கமும் சொந்தமாக தடுப்பூசியை வாங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles