
ஐந்து முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்திற்கு ஐரோப்பிய ஐஸ் ஒன்றிய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து ஃபைசர் நிறுவனம் சார்பில் குறைவான அளவு கொண்ட கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. இதனையடுத்து இத்தாலி, ஸ்பெயின், ஹங்கேரி, கிரீஸ் நாடுகளில் சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. ஏதென்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் நேற்று 12 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. முதல்கட்டமாக கிரீஸ் நாட்டு பெற்றோர்கள் தரப்பில் 30 ஆயிரம் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை அமைச்சர் நிக்கி கெராமியஸ் தெரிவித்துள்ளார்.
