29.9 C
Kuala Lumpur
Wednesday, July 29, 2026

Vetri

காசல்ஃபீல்டு தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 2 தங்கம், 3 வெள்ளிப் பதக்கங்கள் வென்று சாதனை !

🔥 Views : 19
👁 Reading Now : 36

பூச்சோங் காசல்ஃபீல்டு தமிழ்ப்பள்ளியின் இளம் அறிவியலாளர் குழுவினர் அனைத்துலக இளம் புத்தாக்கக் கண்காட்சியில் 2 தங்கப்பதக்கங்களையும் 3 வெள்ளிப் பதக்கங்களையும் வென்று சாதனை புரிந்துள்ளார்கள். இந்த போட்டியில் 12 நாடுகளைச் சேர்ந்த 121 குழுக்கள் கலந்து கொண்டன. கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் (KLCC) நடந்த இப்போட்டியில் காசல்ஃபீல்டு தமிழ்ப்பள்ளி இயங்கலை வாயிலாக கலந்து கொண்டது. காசல்ஃபீல்டு தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 5 குழுக்களில் 22 மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் சிறப்பான அடைவு நிலையைப் பதிவு செய்த காசல்பீல்டு தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக பெற்றார் ஆசிரியர் சங்க செயலவை உறுப்பினர் கோபி தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles