30.1 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் ஜசெக வெற்றி பெற்றது

சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தலில் ஜசெக இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பண்டுவான் தொகுதியில் போட்டியிட்ட ஜசெக வேட்பாளர் சோங் சென் ஜூன் 4,686 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ஜிபிஎஸ் வேட்பாளர் வீ ஹோங் சென் 3,488 வாக்குகள் பெற்று தோல்வி கண்டார். இறுதியில் 1,198 வாக்குகள் வித்தியாசத்தில் ஜசெக இந்த தொகுதியில் வெற்றி பெற்றது. பெட்டிங் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட ஜசெக வேட்பாளர் வியோலோட் யோங் 5,188 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ஜிபிஎஸ் வேட்பாளர் மில்டன் 4,648 வாக்குகள் மற்றும் பார்ட்டி சரவாக் பெர்சத்து வேட்பாளர் டான் கோக் ஹூய் 1,858 வாக்குகள் பெற்று தோல்வி கண்டனர். 2016 இல் நடைபெற்ற தேர்தலில் ஜசெக 7 தொகுதியில் வெற்றி பெற்றது. ஆனால் இம்முறை இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles