
குற்றச்செயல் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இந்திய இளைஞர் சிவபாலன் சுப்பிரமணியம் ( வயது 42) போலீஸ் நிலையத்தில் திடீர் மரணம் அடைந்தார்.
கைதுசெய்யப்பட்டு ஒரு மணி நேரத்தில் இவர் மரணம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவரின் மரணத்தை கேட்டறிந்த குடும்பத்தினர் மற்றும் அரச சார்பற்ற இயக்கத்தினர் ஒன்று திரண்டனர்.
குற்றச்செயல் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் நேற்று காலை 11.45 மணிக்கு கைது செய்யப்பட்ட சிவபாலன் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பிற்பகல் 12.45 மணிக்கு மரணமுற்றார்.
இவரின் மரணத்தை திடீர் மரணம் என்று போலீசார் வகை படுத்தி உள்ளனர்.
இதனிடையே, இவரின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கோரி குடும்பத்தினர் மற்றும் அரச சார்பற்ற இயக்கத்தினர் குரல் எழுப்பி உள்ளனர்.



