
போலீசாரால் கைது செய்யப்படும் இந்திய இளைஞர்கள் காவலில் மரணமடைவது ஒரு தொடர்கதயா? என்று பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார். அண்மைக்காலமாக இந்திய இளைஞர்கள் காவலில் தொடர்ந்து மரணமடைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த மரணம் தொடர்பில் ஒளிவுமறைவின்றி விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளன.
ஒரு மாதத்திற்கு முன்னர் தான் காவல் கைதி கணபதி என்பவர் பரிதாபமாக மரணமடைந்தார். இந்நிலையில் நேற்று கைது செய்யப்பட்டு ஒரு மணி நேரத்தில் சிவபாலன் என்பவர் மரணம் அடைந்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக பிரபாகரன் சுட்டிக்காட்டினார்
குற்றச்செயல் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இந்திய இளைஞர் சிவபாலன் சுப்பிரமணியம் ( வயது 42) போலீஸ் நிலையத்தில் திடீர் மரணம் அடைந்துள்ளார்
அதுவும் கைது செய்யப்பட்டு ஒரு மணி நேரத்தில் இவர் மரணம் அடைந்த சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவரின் மரணத்தை திடீர் மரணம் என்று போலீசார் வகை படுத்தி இருந்தாலும், இவரின் மரணம் தொடர்பில் முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.



