
தடுப்புக்காவல் கைதிகள் மரணமடையும் சம்பவம் தொடர்பில் சுயேட்சை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ கோரிக்கை விடுத்துள்ளார். அண்மைக்காலமாக தடுப்புக் காவல் கைதிகள் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை அளிக்கிறது.
ஆக இறுதியாக சிவபாலன் என்பவர் மரணம் நேற்று மரணம் அடைந்திருக்கிறார். கைதிகள் மரணமடைந்த சம்பவத்தை ஒளிவு மறைவின்றி விசாரணை நடத்தப்பட வேண்டும்.
குறிப்பாக மனித உரிமை ஆணையம் மற்றும் நேர்மை ஒற்றுமை ஆணையம் ஒளிவுமறைவின்றி விசாரணை நடத்தி இதற்கு தீர்வு காண வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.



